மினுவாங்கொட ஆடை தொழிற்சலையில் மேலும் 220 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 323 ஆக செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்றைய தினம் 101 நபர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலையைச் சேர்ந்த தலா ஒருவரும், குருணாகலைச் சேர்ந்த இருவரும் கொரோனா தொற்றாளர்களும் இவர்களுள் அடங்குவர்.

ஆடை தொழிற்சலையின் 39 வயதுடைய பெண் ஊழியர் கடந்த சனிக்கிழமை இரவு கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டார்.

அதனையடுத்து அவரது மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version