அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இன்று காலை அதிமுக தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓபன்னீர் செல்வம் இருவரும் இணைந்துஇந்த முடிவை அறிவித்துள்ளனர்.


இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவை அறிவித்தார்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட ஓ பன்னீர் செல்வம் அதிமுகமுதல்வர் வேட்பாளராக முதல்வர்

எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுவார் என அறிவித்தார்.
கட்சியின் முடிவிற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமது ஆதரவை வழங்கவேண்டும் எனஅவர் கேட்டுக்கொண்டார்.

கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர் செல்வத்திற்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version