சனி, ஞாயிற்றுகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார்.

அவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும். சிலவேளை மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லுங்கள்.” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version