ரூபாய் நோட்டுகள், செல்போன்கள், எவர்சில்வர் போன்ற பரப்புகளில் கொரோனா வைரஸ் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவ்வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என தெரியவந்துள்ளது.
செல்போன் ஸ்கிரீன்கள், எவர்சில்வர் பொருட்களிலும் 28 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.