யாழ். இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் 320 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில்  பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர்கள் 6 பேரைத் தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version