மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 26 ஆந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02 ஆந் திகதி வரையும் 16 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே மக்கள் மழைக்காலங்களில் அவதானமாகவும் சூழலை சுத்தமாகவும் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version