கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 194 பேர் இன்றுஅடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000த்தினை கடந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஏனைய 114 பேர் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள்.
இதன்காரணமாக ஒக்டோபர் நான்காம் திகதி தெரியவந்த மினுவாங்கொட கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1591 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் வெலிசரை கடற்படை முகாம் கொத்தணியில் அதிகளவாக 950 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மினுவாஙகொடையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொடை கொத்தணி குறித்த விபரங்கள் வெளியானவுடன் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் உட்பட் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நோயாளிகள் பெரும்பான்மையானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை கொழுமபிலும் பலர் கண்டுபிடிக்கப்பட்டுளளனர்.
மினுவாங்கொட கொத்தணி சமூக தொற்று குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 194 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையி;ல இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5003 ஆக அதிகரித்துள்ளது.