இந்தியாவின் பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்ய முயன்றபோது கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில்  பரவி வருகிறது.

54 வயதான யோகா குரு  பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனம் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருபவர்.

 

இவர் கடந்த திங்கட்கிழமை, உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவில் உள்ள ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமீபத்தில் யோகா செய்து காண்பிக்கத் தீர்மானத்தார்.

இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏறி ஹாயாக அமர்ந்தார். வழக்கம் போல கால்களை மடித்து யோகாசனம் செய்ய முயன்றார் ராம்தேவ். அதுவரை அமைதியாக பொறுமையாக நின்று கொண்டிருந்தது யானை.

 

பின்னர் திடீரென லேசாக யானை நகர்ந்தது. இதனால் யானை மீது அமர்ந்திருந்த பாபா ராம்தேவ் அப்படியே அமர்ந்த நிலையில் திடீரென கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழே விழுந்த உடனே ராம்தேவ் உடனடியாக  எழுந்து நின்றார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அவரின் பேச்சாளர் எஸ்,கே,திஜாரிவாலா நேற்று தெரிவித்துள்ளார்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version