உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆனது இன்று 40 மில்லியனைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரை பரிசோதிப்பதில் இல்ல குறைபாடுகள், சில நாடுகளால் குறைத்துச் சொல்லப்பட்டதாகக் கூறப்படும் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை என்பதன் காரணமாக உண்மையாக கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் மிக அதிகம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

சீனாவில் இவ்வாண்டு ஜனவரி மாத ஆரம்பத்தில் வுஹானில் முதலாவது கொவிட்-19 தொற்று அடையாளப்பட்டதிலிருந்து 10 மில்லியன் தொற்றுக்களை அடைய மூன்று மாதங்கள் எடுத்ததுடன், 10 மில்லியனிலிருந்து 20 மில்லியனுக்கு 44 நாள்களிலும், 20 மில்லியனிலிருந்து 30 மில்லியனுக்கு 38 நாள்களிலும், 30 மில்லியனிலிருந்து 40 மில்லியன் வரையில் 32 நாள்களிலும் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதனை ரீத்யாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாளில் முதற்தடவையாக உலகளாவிய கொவிட்-19 தொற்றுக்கள் 400,000க்கும் அதிகத்தால் அதிகரித்திருந்தன.

ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகியனவே உலகில் மோசமான பாதிக்கப்பட்ட நாடுகளாகக் காணப்படுவதுடன், வட, மத்திய தென்னமரிகாவானது பூகோளத்தில் ஏறத்தாழ அரைவாசி கொவிட்-19 தொற்றுக்களைக் கொண்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் 10,000 பேரில் ஏறத்தாழ 247 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகின்ற நிலையில், இந்தியாவில் இந்த எண்ணிக்கை 55, பிரேஸிலில் 248ஆகக் காணப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version