விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கண்டங்கள் வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.