இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் ஏறக்குறைய அரைவாசி மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என மருத்துவ நிபுணர் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நிபுணர் குழு உறுப்பினருமான மனிந்திர அகர்வால் சர்வதேச செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “எங்கள் கணித மாதிரி ஆய்வில் தற்போது 30 சதவீத மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது பெப்ரவரி மாதத்திற்குள் 50 சதவீதம் வரை உயரக்கூடும்.

நாங்கள் ஒரு புதிய மாதிரியை உருவாக்கியுள்ளோம் இது பதிவு செய்யப்படாத நோய் பாதித்தவர்களை வெளிப்படையாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் அறிக்கையிடப்பட்ட பாதிப்புகள் மற்றும் அறிக்கை செய்யப்படாதவை.

வைரஸின் தற்போதைய பரவலுக்கான குழுவின் மதிப்பீடு மத்திய அரசின் செரோலாஜிகல் கணக்கெடுப்புகளை விட மிக அதிகமாக உள்ளது. செரோலாஜிகல் கணக்கெடுப்பு செப்டம்பர் மாத நிலவரப்படி சுமார் 14 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால் அவர்களின் கணிப்புகள் நீடிக்காது. சமூக விலகல் மற்றும் முககவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் ஒரே மாதத்தில் பாதிப்புகள் 26 இலட்சம் வரை அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version