கம்பாஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணியுடனான கடந்த 24 மணி நேரப் பகுதியில் 80 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனால் கம்பஹா மாவட்டத்தின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1782 ஆக உயர்வடைந்துள்ளதாக மாவட்ட சுகாதார ச‍ேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கம்பஹா மாவட்த்தில் 1,712 பி.சி.ஆர் சோதனைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை  27,652 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இன்று மாலை 4.00 மணியுடனான காலப் பகுதியில 46 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மேலும், இன்று கட்டூநாயக்கத்தில் உள்ள சீதுவா பொது சுகாதார ஆய்வு பிரிவில் 3 புதிய கொரோனா நோயாளிகள் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாவும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  இந்த பிரிவின் பொது சுகாதார ஆய்வாளர் சுரேஷ் குமாரா சுடடிக்காட்டியுள்ளார்.

இதனிடையே பேலியகொட மீன் சந்தையின் இரு வர்த்தகர்கள் வாதுபிட்டிவாலா மற்றும் றாகமா மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தபோது, அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,

அதன் பின்னர் சந்தையில் இருந்து மீன் வாங்க வந்த இருவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள்.

அதுமாத்திரமன்றி பேலியகொடவில் தொழில்புரியும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுள் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

இந் நிலையில் கம்பாஹா மாவட்டத்தில் இன்றிரவு 10.00 மணி முதல் ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாவட்ட சுகாதார ச‍ேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேதளை இன்றைய தினம் 109 புதிய கொரோனா தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். அதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,920 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 2,451 ஆக பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version