கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியிலிருந்து மாணவன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன், கட்டைக்காடு பகுதியிலிருந்து திருமண நிகழ்வொன்றுக்காக தருமபுரத்திற்கு நேற்று சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த திருமண நிகழ்வுக்குச் சென்று, அன்றிரவு முழுவதும் வீடு திரும்பாததால் மாணவனை உறவினர்கள் தேடிவந்த நிலையில் கிணறு ஒன்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், தருமரபுரம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகநாதன் தர்சன் (வயது-18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தருமபுரம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version