இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவர் இறக்கும் போது குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இதய நோயாளி என்று கூறப்பட்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வார தொடக்கத்தில் இலங்கை 14 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணத்தை பதிவு செய்தது.

அங்கொடவில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குளியாப்பிட்டியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அந்த பெண் வைரஸ் பாதித்த நேரத்தில் நிமோனியா மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இலங்கையில் 13 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் செப்டம்பர் 14 ஆம் திகதி அன்று பதிவாகியது.

சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடை குறித்த நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version