நாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள்.

அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத் தோன்றினால் அதன் அர்த்தம் என்ன என்பது தெரியுமா..?

நெருப்பு அடிக்கடி கனவில் வந்தால் ஏதோ உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

தண்ணீர் கனவில் வந்தால் வாழ்க்கையில் ஏதோ சுத்திகரிப்பு அல்லது தீமைகள் சரிசெய்யப்பட்டு தீர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

பெண்கள் கர்ப்பமாக இருப்பதுபோல் கனவு கண்டால் ஏதோ வாழ்க்கையில் சாதகமான ஒன்று நடக்கப்போகிறது என்று அர்த்தம். சில முன்னேற்றங்களும் நடக்கலாம்.

மரணம் கனவில் வந்தால் ஏதோ ஒரு பெரும் அத்தியாயம் முடிவடைந்து புதிய அத்தியாயம் துவங்கவிருப்பதை சுட்டிக்காட்டுவதே அர்த்தம். அது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம்.

நீங்கள் நிர்வாணமாக இருப்பதுபோல் கனவு கண்டால் எதையோ கண்டு பயப்படுகிறீர்கள், பாதுகாப்பற்ற உணர்வுகளோடு இருக்கிறீர்கள் அல்லது அதுபோன்ற பிரச்னைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.

யாராவது உங்களைத் துரத்துவதுபோன்று கனவு கண்டால் ஏதோ ஒரு பிரச்னை துரத்துகிறது அல்லது துரத்தப்போகிறது அதற்காக விலகி ஓடுகிறீர்கள் என்று அர்த்தம்.

மேலிருந்து கீழே விழுவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் அவசியம் , கட்டுப்பாட்டோடு நிதான முடிவுகள் எடுப்பது அவசியம் என்பதை நினைவூட்டுவதே இந்த கனவு.

பறப்பது போன்ற கனவு வருவது நேர்மறையான விஷயங்கள் உங்கள் வாழ்கையில் நடக்கவிருப்பதை உணர்த்துகிறது. நீண்ட நாட்களாக நினைத்த லட்சியங்களை அடைய சிறப்பான நேரமிது.

Share.
Leave A Reply

Exit mobile version