யாழ்ப்பாணம் குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள் மற்றும் வெளியாட்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version