பிக்பொஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக நேற்றைய தினம் பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர் காலையில் மோதிவிட்டு பின்னர் திடீரென இரவில் சமாதானம் ஆனது பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

தாய்ப்பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த பாலாஜிக்கு திடீரென கிடைத்த அர்ச்சனாவின் தாய் பாசம் அவரை கண்கலங்க வைத்தது.

இந் நிலையில் இன்றைய டாஸ்க்கான ’நீங்கா நினைவுகள்’ என்ற டாஸ்க்கில் யார் யாரை எல்லாம் நீங்கள் மிஸ் செய்கிறீர்கள் என்பது குறித்து அவரவரது அனுபவத்தை சொல்ல வேண்டும் என்று பிக்பொஸ் கூறுகிறார்.

இதனை அடுத்து முதலில் பேச வந்த ரம்யா பாண்டியன், ’அர்ச்சனாவை பார்க்கும் போது எனது அம்மாவின் ஞாபகம் வந்தது’ என்று கூறி கண்ணீர் விடுகிறார்.

பிக்பொஸ் வீட்டில் 24 மணி நேரமும் சிரித்து கொண்டே இருந்த ரம்யாவையும் கடைசியில் அழ வைத்துவிட்டீர்களே பிக்பாஸ்’ என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

அந் வகையில் என் கணவர் கார்த்திக் குறித்து நான் இதுவரை பேசினதே இல்லை என்று சம்யுக்தாவும் கண்கலங்கிய காட்சிகள் இன்றைய முதல் புரமோவிலுள்ளன.

மேலும் பாலாஜியை பார்க்கும்போது எனது மகனை பார்ப்பது போலுள்ளது என சுரேஷும் லேசாக கண் கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்த வாரம் முழுவதும் செண்டிமெண்ட் கலந்த சோகமாகவே இருந்து வருகிறது.

(நன்றி – indiaglitz)

Share.
Leave A Reply

Exit mobile version