மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (புதன்கிழமை )உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version