கிளிநொச்சி ஏ-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் 28 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 58 வயதுடைய தாயொருவரும் அவரது 21 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version