நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 397 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

அதன்படி இதுவரை மொத்தமாக 11,060 கொரோனா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 7,582 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் 506 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4,905 ஆக உயர்வடைந்தது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் ஏழு வெளிநாட்டினர் உட்பட 6,134 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 405 நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பதிவு செய்யப்பட்ட 21 ஆவது உயிரிழப்பு ஆகும். மஹரவில் வசிக்கும் 40 வயதுடைய ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 11,713 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெப்ரவரி முதல் நேற்று வரையான காலப் பகுதியில் இதுவரை 524,448 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version