இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சரியானதே கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பௌத்தனாக பௌத்த சடங்குகளையும் போதனைகளையும் தான் பின்பற்றுவேன் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.

அதன்படி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version