கால்நடைகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை தன்னுடைய காரில் துரத்திச் சென்ற ஆனமடுவ பொலிஸ் நிலைய உதவி அத்தியட்சகர் ஹேமந்த ரட்ணாயக்க விபத்தில் சிக்கி உயிரழந்த பரிதாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

லெறியை துரத்திச் சென்ற போது அவரது கார் வீதியிலிருந்து விலகி ஆனமடுவ நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தில் மோதிய போதே இந்த விபத்து இடம்பெற்றது.

கால் நடைகளை லொறி ஒன்றில் சிலர் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே உதவி அத்யட்சகர் தன்னுடைய சொந்தக் காரில் அதனைத் துரத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அந்த வேளையில் காரில் இருந்ததாகவும், அவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version