உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இலங்கையர் 90 பேர், வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் 31 பேரும், குவைத்தில் 20 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 10 பேரும், கட்டாரில் 06 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் 05 பேரும் இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, ஓமான், அமெரிக்கா, கனடா, ஆகிய நாடுகளில் தலா 04 பேர் வீதம் 12 பேரும், பஹ்ரைன், ஜேர்மனி ஆகிய நாடுகளில் தலா 02 பேர் வீதம் 04 பேரும், ஈஸ்ரேல், இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒருவர் வீதம் மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version