உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, உன்னிச்சை – கரவெட்டியாறு வயற் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) ) உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

 

அருணாச்சலம் அஜித்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், காயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவருகிறார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இச்சம்பவம் குறித்து  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான இளைஞர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறாதவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version