புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் உடப்பு சந்தியிலுள்ள வீதியோர வடிகானில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.

புளிச்சாக்குளம் அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியோரத்தில் உள்ள வடிகானில் சடலம் ஒன்று கிடப்பதாக உடப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

ஆத்துடன், சம்பவ இடத்திற்கு புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சம்சுல் ராபி விஜயம் செய்து நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை செவ்வாய்க்கிழமை (10) பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version