நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாகவும், அதில் நயன்தாரா முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹீரோயின்களின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுகிறது. படம் ஹிட் ஆனால் அவர்களாக கூட்டுவதும் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்களே குறைத்து விடுவதும் வழக்கம். கொரோனா லாக்டவுனுக்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஹீரோயின்களின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால் அவரது சம்பளம் ஏறி உள்ளது. நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் உள்ளார். அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார்.

நடிகைகள் திரிஷா, தமன்னா, எமி ஜாக்சன் ஆகிய மூவரும் ரூ.1.50 கோடியும், சுருதிஹாசன் 1 கோடி ரூபாயும், கீர்த்தி சுரேஷ் 80 லட்சம் ரூபாயும், அஞ்சலி 70 லட்சம் ரூபாயும், ரெஜினா 60 லட்சம் ரூபாயும், ஸ்ரேயா 50 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெறுகிறார்கள்.

ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் ரூ.40 லட்சத்தை சம்பளமாக நிர்ணயித்து உள்ளனர். நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர் 35 லட்சம் ரூபாயும், பிரணிதா, பாவனா ஆகியோர் 30 லட்சம் ரூபாயும், அனுபமா பரமேஸ்வரன் 25 லட்சம் ரூபாயும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் 10 லட்சம் ரூபாய் வீதமும் சம்பளத்தை நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version