கொரோனாத் தடுப்பு சமூக இடைவெளியைப் பேணாது தீபாவளிப் பண்டிகைக் கொள்வனவுக்காக யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொதுமக்கள்
நேற்று அலை மோதினர்.

வழமையாக தீபாவளிப் பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால்
யாழ்.நகரம் நிறைந்து காணப்படும்.

எனினும்,இம்முறை கொரோனா அச்சுறுத்த
லால் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியைக்கொண்டாடுமாறு
சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் இந்து மதத் தலைவர்களும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதனால் யாழ்.நகரம் நேற்று மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளில் பொதுமக்கள் வழமைபோன்று அலைமோதியதைக் காண முடிந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version