கொரோனா தொற்றாளர்களை துரிதமாக இனங்காண்பதோடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தால் கொழும்மை விரைவில் வழமைக் கொண்டுவர முடியும் என்பதாலேயே கொழும்பு மாநகரத்தை இருவாரங்கள் முழுமையாக முடக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தேன் என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று (20) வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அதேபோன்று கொழும்பு மாநகரத்தில் சில தொடர் மாடிக்குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக பலர் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கொழும்பு மாநகரத்துக்குள் தேவையுடைய 100,000 குடும்பங்களில் சுமார் 70,000 குடும்பங்களுக்கு அவசியமான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

மேலும் 30,000 குடும்பங்களுக்கு அவசியமான பொருட்களை வழங்குவதற்கு இயலுமானவர்கள் உதவ முன்வர வேண்டும்.

மேலும் கொழும்பு மாநகரத்தில் சில தொடர்மாடிக்குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக பலர் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இயலுமானவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

Share.
Leave A Reply

Exit mobile version