முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு தொட்டில் கட்டுவதற்காக வீட்டிற்கு மேல் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் 21.11.2020 அன்று நடைபெற்றுள்ளது.

இருட்டு மடுவினை சேர்ந்த 36 வயதுடைய  இராமசாமி மோகன்றாஜ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று (22)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தை பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் தொட்டில் கட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version