அரச நிர்வாக நடவடிக்கைகளின் போது,  அரசியலமைப்பு,  வர்த்தமானி அறிவித்தல்கள் போன்ற சட்ட ரீதியிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவாக இருப்பினும்,  நடை முறையில் ஏற்படும் பிரச்சினைகளின் போது  ஜனாதிபதி  தனது தீர்மானத்தின் பிரகாரம், அந்த சட்டக் கட்டமைப்புக்கு அப்பால் சென்று செயற்படவேண்டிய நிலையும் ஏற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பாதுகாப்பு பேரவையில் இருந்து நிறுத்தியமை, கடந்த 2018 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம்  அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவையை நீக்கியமை ஆகியவற்றை தான் அதற்கமையவே முன்னெடுத்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் அவர் இன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின்   ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட எழுப்பிய குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version