யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலில் உள்ள மூவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version