வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியதில் வேறு இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சுவிஸின் தெற்கே இத்தாலி மொழி பேசும் கன்ரன் பிரதேசமான ரீசினோவில் உள்ள லுஹானோ (Lugano) நகரில் இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.

விசாரணையாளர்கள் இதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனச் சந்தேகிக்கின்றனர். தாக்குதலை நடத்திய 28 வயதுப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் அதே இடத்தில் வசிக்கும் ஒரு சுவிஸ் பிரஜை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மிகஅரிதாகவே இடம்பெற்றுள்ளன. எனினும் அங்கு தாக்குதல் அச்சுறுத்தல் விழிப்பு நிலை பேணப்பட்டுவருகிறது.

அண்மையில் ஒஸ்ரியாவின் தலைநகர் வீயன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் சுவிஸின் சூரிச்சில் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version