பூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து தனது காலை எடுக்க மறுத்த 23 வயது நிரம்பிய இளைஞனை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

பூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து தனது காலை எடுக்க மறுத்த இளைஞனை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி போலீசார் தரப்பில் கூறியதாவது:-

டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று வந்திருந்த 23 வயது நிரம்பிய இளைஞன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துள்ளான். மேலும், தனக்கு எதிரே இருந்த மற்றொரு இருக்கையில் தனது இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளான்.

அப்போது அங்குவந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும் அதனால் அந்த இளைஞனிடம் இருக்கையில் இருந்து கால்களை கிழே இறக்கி வைக்கும்படி கேட்டுள்ளான். அதற்கு அந்த இளைஞன் மறுப்பு தெரிவித்துள்ளான். இதனால், அந்த இளைஞனுக்கும், சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவன் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அந்த இளைஞனை நோக்கி சுட்டுள்ளான். இதில் அந்த 23 வயது இளைஞனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 23 வயது இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version