மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்கள் பெருமளவில சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளதால் பதற்றமாhன நிலை உருவாகியுள்ளது.

சிறைச்சாலைக்கு வெளியே 100க்கும் மேற்பட்டவர்கள் காண்பபடுகின்றனர் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மஹர சிறையிலிருந்து காயமடைடந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள் கதறியழுவதையும் சீற்றமடைவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version