முல்லேரியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லேரியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணியளவில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தின் போது சகோதரர்கள் இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.

இதன்போது ஒருவர் பொல்லால் அவரது சகோதரரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடுவல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version