புரவி சூறாவளி தற்போது கிழக்குக் கரைக்குள் புகுந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குக் கரையோரத்தின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவும் இந்த புயல் திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் கிழக்கு கரையை தொட்டுள்ளது.
இந்த புயல் நகரும் தடத்தில், மணிக்கு 80 முதல் 90 மைல் வேகத்தில் காற்று வீசும். அது மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். புரவி புயல் மேற்குத் திசையில் நகர்ந்து நாளை காலை அளவில் மன்னார் குடாவை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் காரணமாக, திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலும் கரையோரப் பிரதேசங்களில் ஒரு மீற்றர் வரையிலான அலைகள் தோன்றி, கடல்நீர் நிலத்திற்குள் வரக்கூடும் என திணைக்களத்தின் சிவப்பு அறிவித்தலில் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியின் காரணமாக, நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து, கடல் மிகவும் கொந்தளிப்பானதாக மாறலாம்.
நாட்டின் உட்பிரதேசங்களைப் பொறுத்தவரையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு வடமேல், மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசலாம். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லி மீற்றரைத் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறும் கேட்கப்படுகிறார்கள்.
முறிந்து விழக்கூடிய மரங்கள், மின்கம்பங்கள் பற்றி அவதானம் தேவை. இடிமின்னல் தாக்கம் ஏற்படுகையில், கம்பிவழி தொலைபேசிகள், இலத்திரனியல சாதனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் தத்தமது பிரதேசங்களைச் சேர்ந்த இடர்காப்பு முகாமைத்துவ நிலைய அதிகாரிகளைத் தொர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேநேரம் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான நிவாரணங்களை வழங்வதற்கான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, கிழக்கு கடற்பரப்பில் இருந்து தீவுக்குள் பிரவேசிக்கின்ற புரவி சூறாவளியின் காரணமாக, மின்சார விநியோகத்துக்கு தடங்கல்கள் ஏற்படுமாக இருந்தால், அதனை சீர்செய்வதற்காக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு மேலதிக மின்சார ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக தற்போது வரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
சூறாவளியின் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளும் வகையில், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
புரவி சூறாவளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 21820 குடும்பங்களை சேர்ந்த 75000 அங்கத்தவர்கள் தங்க முடியும்.
குறிப்பாக கரையோரங்களில் உள்ள மக்களைப் பாதுகாக்க அவர்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடைத்தங்கல் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
அதற்கமைய அந்த யோசனைகளை தயாரிப்பதற்காக பேராசிரியர் சேனக்க பிலபிட்டியவின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
இந்த குழுவிலே விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ,பேராசிரியர்களான ,சிசிர சிரிவர்தண, சரோஜா ஜயசிங்க, ஜனக்க த சில்வா,சேம் குலரத்ன மற்றும் காமினி வனிகசூரிய ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.