புரெவி சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் 65 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழில் தொடரும் மழை ! 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2,941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தபுரம்,ஞானவைவரவர் கோயிலடி,வசந்தபுரம்,மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் புரெவியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு – மீனவர்களின் படகுகளுக்கும் சேதம்
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3,045 நபர்கள் 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் தமது வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு வீடு முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக குறித்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணத்தில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேரும், கிளிநொச்சியில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,949 பேரும், மன்னாரில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1,114 பேரும் மற்றும் முல்லைத்தீவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேரும் இவ்வாறு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி தாக்கம் காரணமாக 15 வீடுகள் முழுமையாகவும் 170 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.