யாழில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கு இன்று (சனிக்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கொழும்பிலிருந்து வீடு திரும்பியிருந்த பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
அவருக்கு நேற்று முன்தினம் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரின் உறவிர்கள் மூவருக்னே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஓடக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

