மஹர சிறைச்சாலை கலவரத்தின் போது பலியான 11 கைதிகளில் ஆறு பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரண்டு உடல்களை குடும்பத்தவர்கள் அடையாளம் காட்டினார்கள்,நேற்று நான்கு உடல்கள் அடையாளம காணப்பட்டன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்டவர்கள் ஜா-எல வத்தளை மினுவாங்கொட அங்குருவத்தோட்டை வெலிவேரிய மற்றும் எந்தரமுல்லையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தவர்கள் அடையாளம் காட்டியுள்ள நால்வரின் உடல்களை ராகமதலைமை சட்ட வைத்திய அதிகாரி பிரதேபரிசோதனைக்கு உட்படுத்துவார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version