கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவிப் புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடும் மழை மற்றும புயல் காரணமாக, குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
மிகவும் சிரமத்துக்கு மத்தியில் கடந்த வரட்சிக் காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது  என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைச்செய்கை பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply

Exit mobile version