கிணற்றில் விழுந்து சிறுமி பரிதாபமாக பலி

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் அருகில் காணப்பட்ட பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்தே சிறுமி உயிரிழந்துள்ளார்.

ஏழு வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version