உரிய சோதனைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் பதட்டமடைந்து கொரோனா வைரசினை குணப்படுத்தும் என தெரிவிக்கும் ஆயுர்வேத மருந்தினை கொள்வனவு செய்யக்கூடாது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்

ஆயுர்வேத மருந்து குறித்த சோதனைகள் முடிவடையும் வரை அந்த மருந்தினை பெறுவதற்காக பெருமளவில் ஒரேஇடத்தில் குவிவதை தவிர்க்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த மருந்தினை ஆராய்ச்சி செய்வதாக ககாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளா அந்த ஆய்வுகளின் அடிப்படையில் இறுதிமுடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்து குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது சுகாதார அமைச்சு அந்த மருந்து குறித்து ஆராய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version