உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்து 74 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 74 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 3 ஆயிரத்து 164 பேரும், பிரேசிலில் 848 பேரும், மெக்சிகோவில் 800 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 92 லட்சத்து 5 ஆயிரத்து 722 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 96 லட்சத்து 84 ஆயிரத்து 555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 221 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரத்து 705 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,96,620
பிரேசில் – 1,79,032
இந்தியா – 1,41,360
மெக்சிகோ – 1,10,874
இங்கிலாந்து – 62,566
இத்தாலி – 61,739
பிரான்ஸ் – 56,648
ஈரான் – 51,212
ஸ்பெயின் – 47,019

Share.
Leave A Reply

Exit mobile version