மனித-யானை மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானையின் இறப்புக்கள் இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகின்றன என்று அரசாங்கக் கணக்குக் பற்றிய குழு (கோபா தெரிவித்துள்ளது.
அதேநேரம் மனித-யானை மோதலால் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகள் பதிவாகும் நாடுகளின் பட்டியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது.
இலங்கையில் மனித-யானை மோதலை சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பாக கோபா குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அதன் கண்டுபிடிப்புகள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தது.
மனித – யானை மோதலால் இலங்கையில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழப்பதாக கூறப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு மாத்திரம் அந்த எண்ணிக்கை 407 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் இப் பிரச்சினை காரணமாக ஆண்டுதோறும் சரசாரியாக 85 நபர்கள் உயிரிழப்பதாக கூறப்பட்ட போதிலும் கடந்த ஆண்டு 122 பேர் உயிரிழந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

