நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று வரை 95,825 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதேவேளை வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ள அனைவரும அவசியம் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை  பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் ஏதேனும் அவசர தேவைகள் இருந்தால் வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறும் எவரும் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version