வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
வவுனியாவில் நேற்றையதினம் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
இதனையடுத்து வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகள் இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
