வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவனை பார்க்க வந்த மனைவியால், அந்த வைத்தியசாலையின் வாட், தனிமைப்படுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கணவனும் பிரிதொரு வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அங்கு 56ஆவது வாட்டில், ​அ​ப்பெண்ணின் கணவன் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவரை பார்ப்பதற்கு, மனைவி வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொடகந்த பிரதேசத்தில் உள்ள அறையொன்றில் தங்கியிருந்தே தன்னுடைய கணவனை பார்ப்பதற்காக, அப்பெண் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண், மேலதிக சிகிச்சைகளுக்காக ஹிக்கடுவ ஆராச்சிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இப்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 56ஆவது வார்டில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்த அவரது கணவர், தனிமைப்படுத்தப்பட்டார். அந்த வார்டில் இருந்த ஏனைய நோயாளர்களும் வேறொரு வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version