வைரஸ் – பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக தென்கொரியா நாடு முழுவதும் 6.1 மில்லியன் பறவைகளை கொன்று குவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொடர்பான 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

4 மில்லியன் கோழிகளும், 1.2 மில்லியன் காடைகளும் இவற்றுள் அடங்கியுள்ளதாக தென்கொரியாவின் வேளாண்மை, உணவு மற்றும் கிராம விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தென் கொரியா நவம்பர் முதல் பண்ணைகளிலிருந்து 18 பறவைக் காய்ச்சல் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளதுடன், நாடு முழுவதும் காட்டு பறவை வாழ்விடங்களில் இருந்து மொத்தம் 29 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version