யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 312 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளுவதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது. அவற்றின் முடிவுகள் இன்று காலை கிடைத்துள்ளன.
குறித்த பரிசோதனையின் போதே திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்து.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரைக் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்புவதற்கும், அவருடன் தொடர்புப்பட்டவர்களைத் தனிமைப் படுத்துவதற்கும் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

