நிகவரெட்டிய பகுதியில் 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஐவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிகவரெட்டிய பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் தாயார் முறைப்பாடு அளித்துள்ளதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

 

குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்றவுடன், சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர்.

அவர்கள் வீட்டுக்கு வந்துள்ள போதிலும், பாடசாலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் கடந்தும் வீட்டுக்கு வருகை தராத்தால் சந்தேகம் கொண்ட அந்த சிறுமியின் தாயார், அது தொடர்பில் நிக்கவரெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை  மீட்டுள்ளனர். சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் என்று கூறப்படும், அவரது வீட்டின் அயலில் வசித்து வரும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

24 – 70 வயதுக்கு இடைப்பட்ட  சந்தேக நபர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version